தமிழகத்தில் ஒரே நாளில் 1779 பேர் கொரோனாவால் பாதிப்பு!

Coronavirus threat: Staff of CT Institutions sanitising the school buses and labs in the wake of COVID-19 threat in Jalandhar. express photo
தமிழகத்தில் ஒரேநாளில் 1779 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் 1770 பேர், வெளிமாநிலங்களில் இருந்துவந்த 9 பேர் என 1779 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இன்று 81,103 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில் ஒரேநாளில் தொற்று 1,779ஆக உயர்ந்துள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 10,487ஆக அதிகரித்துள்ளது.

கொரோனாவிலிருந்து மேலும் 1027 பேர் குணமடைந்த நிலையில் இதுவரை 8,50,091 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர் எனவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனா காரணமாக மேலும் 11 பேர் இறந்தநிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 12,641ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் ஏற்கெனவே 633 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில், இன்று மேலும் 664 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் இரண்டாம் நாளாக கொரோனா 600ஐ தாண்டியுள்ளது. செங்கல்பட்டில் 162, கோவையில் 153, தஞ்சையில் 108, திருவள்ளூரில் 89, காஞ்சிபுரத்தில் 63, திருவாரூரில் 52, சேலத்தில் 45, மதுரையில் 43, திருச்சியில் 34, திருப்பூரில் 33, ஈரோட்டில் 33, கடலூரில் 28, வேலூரில் 25, திண்டுக்கல்லில் 21, குமரியில் 19, விழுப்புரத்தில் 18, நாமக்கல்லில் 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!