62 மில்லியன் டொலர் தொகையை ஏழை குழந்தைகளுக்கு தானமாக அளித்த லண்டன் கலைஞர்!

லண்டன் கலைஞர் வரைந்த ‘உலகின் மிகப்பெரிய ஓவியம்’ 45 மில்லியன் பவுண்டுகளுக்கு விற்று சாதனை படைத்துள்ளது. பிரித்தானிய கலைஞரான Sacha Jafri உருவாக்கிய உலகின் மிகப்பெரிய ஓவியம், குழந்தைகள் தொண்டு நிறுவனங்களுக்கான நிதி திரட்டுவதற்காக 45 மில்லியன் பவுண்டுகளுக்கு விற்கப்பட்டுள்ளது.

துபாயில் ஒரு ஹோட்டலின் பால்ரூமில் 1,600 சதுர மீட்டர் (17,000 சதுர அடி) கொண்ட ஒரு பிரம்மாண்ட ஓவியத்தை ஜாஃப்ரி எட்டு மாதங்கள் செலவிட்டு வரைந்தார்.

The Journey of Humanity என தலைப்பிடப்பட்ட இந்த ஓவியம் கடந்த செப்டம்பர் மாதம் ‘உலகின் மிகப்பெரிய ஓவியம்’ என கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தது.

இந்த ஓவியத்தை 70 பகுதிகளாக விற்கத் Jafri திட்டமிட்டார், ஆனால் பிரெஞ்சு கிரிப்டோகரன்சி தொழிலதிபர் Andre Abdoune என்பவர் முழு கலைப்படைப்பையும் மொத்தமாக வாங்கியுள்ளார்.

ஒரு உயிருள்ள கலைஞரால் ஏலத்தில் விற்கப்பட்ட மிக விலையுயர்ந்த ஓவியங்களில் இது ஒன்றாகும்.

இந்த 45 மில்லியன் பவுண்டு (62 மில்லியன் டொலர்) பணமும் அப்படியே பிரேசில், இந்தியா, இந்தோனேசியா மற்றும் தென் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் பின்தங்கிய குழந்தைகளுக்கு உதவுவதற்காக துபாய் கேர்ஸ், UNICEF, UNESCO மற்றும் குளோபல் கிஃப்ட் பவுண்டேஷனுக்கு செல்லும் என்று Jafri கூறினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!