மனிதவுரிமை விடயங்களில் மாற்றியமைக்கப்பட்ட புதிய அரசியலமைப்பு உருவாக்க வேண்டும்: நிமல் கருத்து!

Helth Minister Nimalsiripala de Silva.Pic Kavindra PERERA
மனிதவுரிமை தொடர்பான விடயங்களில் மாற்றியமைக்கப்பட்ட புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டுமென அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்காக அமைக்கப்பட்டுள்ள குழுவிடம், அது சார்ந்த யோசனைகளை ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி முன்வைத்திருந்தது.

இந்த நிலையில், அது தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இதனைத் தெரிவித்துள்ளார்.

பௌத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்குவதுடன், அதனை பாதுகாத்தல், உள்ளிட்ட விடயம் பிரதானமாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது மனிதவுரிமை தொடர்பான விடயம் மறுசீரமைக்கப்பட்டு அது தொடர்பில் பல்வேறு விடயங்கள் இணைக்கப்படவேண்டும். கூழலை பாதுகாத்தல், மனிதர்கள் மட்டுமல்லாது விலங்குகளுக்கும் எதிராக முன்னெடுக்க்பட்டும் கொடூர விடயங்கள் அடிப்படை உரிமை மிறலாக கொள்ளப்படவேண்டும்.

மனிதவுரிமை மீறல்கள் தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் மாத்தரமே தற்போது வழக்கு தொடரமுடியும். ஆனால் தூர பிரதேசங்களில் உள்ளவர்களுக்கு உயர்நீதிமன்றத்தில் அதிக செலவுகளுடன் வழக்கு தொடரும் வாய்ப்பு இல்லை. உயர்நீதிமன்றத்திற்கு உள்ள இந்த அதிகாரத்தை மேல் நீதிமன்றங்களுக்கு பெற்றுக்கொடுக்கப்படவேண்டுமென யோசனை முன்வைத்துள்ளோம்.

தற்போதைய நிலையில் அதற்கு மேன்முறையீடு செய்வதற்கு வாய்ப்பு இல்லாத நிலையில், மேல்நீதிமன்றத்தினால் உயர்நீதிமன்றத்திற்கு மேன்முறையீடு செய்யவும் திர்மானம் மேற்கொள்ளப்படவேண்டும்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!