இங்கிலாந்தில் பாடசாலை முன் குவிந்த இஸ்லாமியர்கள்: வெளியான அதிர்ச்சி காரணம்!

இங்கிலாந்திலுள்ள பள்ளி ஒன்றில், ஆசிரியர் ஒருவர் முகமது நபியின் கார்டூன்களை வகுப்பில் காட்டியதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. Batley என்ற இடத்திலுள்ள பள்ளி ஒன்றில் புதிதாக சேர்ந்துள்ள ஆசிரியர் ஒருவர் முகமது நபியின் கார்ட்டூன்களை வகுப்பில் காட்டியதாக கூறப்படுகிறது. அதைத்தொடர்ந்து பள்ளியில் பயிலும் இஸ்லாமிய மாணவர்களின் பெற்றோர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பள்ளியின் முன் கூடியுள்ளதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பெற்றோர்கள் மட்டுமின்றி அப்பகுதியிலுள்ள மசூதிகளிலுள்ளவர்களும் அங்கு கூடியுள்ளதால் பிரச்சினை ஏதும் ஏற்படாமல் தவிர்ப்பதற்காக அங்கு பொலிசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

குறிப்பிட்ட ஆசிரியர் மிகவும் உத்வேகமுள்ள ஆசிரியர் என்றும், பள்ளியில் கல்வி பயிற்றுவிப்பதை விரும்பி செய்பவர் என்றும் கூறப்படுகிறது.

நிர்வாகம் அவரை பணியிடை நீக்கம் செய்துள்ள நிலையில், பெற்றோரோ, அவரை நிரந்தரமாக பணி நீக்கம் செய்ய கோரி வருகின்றனர்.

பள்ளி மூடப்பட்டுள்ளது, அது தெரியாமல் வரும் மாணவர்கள் வீடுகளுக்கு திருப்பி அனுப்பப்படுகிறார்கள்.

பள்ளிக்கு முன் குவிந்துள்ள பெற்றோரில் ஒருவர், அந்த ஆசிரியரின் படத்தை சமூக ஊடகங்களில் வெளிட்டதைத் தொடர்ந்து அவருக்கு பொலிஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கல்வித்துறை செயலரான Gavin Williamson, அந்த ஆசிரியருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

பள்ளியின் முன் ஏராளமான பெற்றோர் கூடியுள்ள நிலையில், இந்த போராட்டங்கள் ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல என்று கூறியுள்ளார் அவர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!