ஏப்ரல் 1 ஆம் திகதியில் இருந்து நிர்ணய விலையில் அரிசி விற்பனை செய்யப்படும்: மஹிந்தானந்த உறுதி!

ஏப்ரல் முதலாம் திகதியில் இருந்து நிர்ணய விலையில் அரிசி விற்பனை செய்யப்படுமென அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே குறிப்பிட்டுள்ளார்.

அரிசி விலைகள் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் புதுவருடத்திற்கு நாடு அரிசி 94 ரூபாவுக்கும், வெள்ளை மற்றும் சிவப்பு பச்சையரிசி 93 ரூபாவுக்கும் பெற்றுக்கொடுக்க நாம் உறுதிமொழி வழங்கினோம். இதற்காக நெல் களஞ்சியப்படுத்தலை மேற்கொண்டோம்.

ஏப்ரல் முதலாம் திகதியில் இருந்து கூட்டுறவு திணைக்களம் 500 சத்தோச 417, அனைத்து தனியார் விற்ப்பனை நிலையங்களில் நிர்ணய விலையில் அரிசியை விற்பனை செய்ய நடவடிக்கை முன்னெடுக்க்பட்டது. இதற்கமைவாக ஏப்ரல் முதலாம் திகதி முதல் அடுத்த மூன்று மாதங்களுக்கு குறித்த விலைகளில் அரிசியை விற்பனை செய்ய எதிர்ப்பார்க்கப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!