குதிரைகளுடன் சிறிலங்கா வந்த பாகிஸ்தான் கூட்டுப்படைத் தளபதி

????????????????????????????????????
பாகிஸ்தானின் கூட்டுப்படைத் தலைமை அதிகாரிகள் குழுவின் தலைவரான ஜெனரல் சுபைர் மஹ்மூட் ஹயட், நான்கு நாட்கள் பயணமாக, நேற்று கொழும்பு வந்து சேர்ந்தார்.

அவரை சிறிலங்காவின் பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானியான அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்த்தன, சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்க ஆகியோர் வரவேற்றனர்.

இவர் சிறிலங்காவில் தங்கியிருக்கும் போது, அதிபர் மைத்திரிபால சிறிசேன, பாதுகாப்புச் செயலர், பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி, முப்படைகளின் தளபதிகளைச் சந்தித்துப் பேச்சுக்களை நடத்தவுள்ளார்.

அத்துடன், பாதுகாப்பு ஒத்துழைப்புகளை வலுப்படுத்துவது குறித்து, முக்கியமாக, பயிற்சி மற்றும் இராணுவ ஒத்திகைகள் தொடர்பாக ஜெனரல் சுபைர் மஹ்மூட் ஹயட், பேச்சுக்களை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சபுகஸ்கந்தையில் உள்ள பாதுகாப்புச் சேவை அதிகாரிகள் கல்லூரியில், விரிவுரை ஒன்றையும் அவர் நிகழ்த்தவுள்ளார்.

சிறிலங்கா விமானப்படைக்கு, ஆறு குதிரைகளையும் ஜெனரல் ஹயட், அதிகாரபூர்வமாக கையளிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!