கனடாவில் ஏழு பெண்களை இரக்கமின்றி கத்தியால் குத்திய கருப்பின இளைஞர்: ஒருவர் பலி!

கனடாவின் வான்கூவரில் ஏழு பெண்கள் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம், கடும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.குத்தப்பட்டதில் தனது 20 வயதுகளில் இருக்கும் பெண் ஒருவர் பலியாகிவிட்டார். இப்போது பாதிக்கப்பட்டவர்கள் குறித்த செய்திகள் ஒவ்வொன்றாக வெளிவந்தவண்ணம் உள்ளன. வட வான்கூவரிலுள்ள மால் ஒன்றில் தனது மகளை நடன வகுப்புக்கு அனுப்பிவிட்டு வெளியே காத்திருந்திருக்கிறார் Susanne Till என்ற மூன்று குழந்தைகளின் தாய்.

அப்போது கருப்பின இளைஞர் ஒருவர் திடீரென Susanneஐ கத்தியால் குத்தியுள்ளார்.

இதைப் பார்த்த Sheloah Klausen என்னும் ஆசிரியை, தன் பிள்ளைகளை பாதுகாப்பாக மறைந்திருக்குமாறு கூறிவிட்டு, ஓடோடிச்சென்று Susanneஐ தாக்கிய இளைஞரை தன் குடையால் அடித்திருக்கிறார்.

சட்டென திரும்பிய அந்த இளைஞர் Klausenஇன் கையை கத்தியால் கீறிவிட்டு, அவரது பின் மண்டையோட்டில் கத்தியால் குத்தியிருக்கிறார்.

Jini Segulam Singh-Henderson என்ற பெண், தன் மகளான Emma தாக்கப்பட்டவர்களில் ஒருவர் என தெரிவித்துள்ளார்.

மற்றொரு இளம்பெண் முகத்திலும் கைகளிலும் கத்தியால் குத்தப்பட்டுள்ளார், உயிரிழந்த பெண் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.

இந்நிலையில், அந்த ஏழு பெண்களையும் கத்தியால் குத்தியவரின் பெயர் Yannick Bandaogo (28) என தெரியவந்துள்ளது.

அவர் ஏன் அந்த பெண்கள் ஏழு பேரையும் கத்தியால் குத்தினார், அவர் பெண்கள் மீது வெறுப்பு கொண்டவரா என்பது தெரியவில்லை, பொலிசார் அவரை விசாரித்து வருகிறார்கள்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!