தேங்காய் எண்ணெய் விவகாரத்தில் வீண் அச்சம் தேவையில்லை : அரசாங்கம் கருத்து!

தேங்காய் எண்ணை விவகாரத்தில் பொதுமக்கள் வீணான அச்சத்தை ஏற்படுத்திக்கொள்ள தேவையில்லை என அமைச்சர் ரமேஸ் பத்திரன குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை சுங்கத்தினால் உரிய சான்றுதழ்களை பெற்றுக்கொள்வதற்கான பரிசோதனைகளின் போதே தேங்காய் எண்ணை விவகாரம் வெளியில் வந்தது. இரண்டாவது முறையும் தற்போது இந்த விவகாரம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையே நாம் தெளிவான பரிசோதனைகளை முன்னெடுக்க ஆரம்பித்துளோம். போலி ஆவணங்கள் ஊடாக சுங்கத்தில இருந்து வெளியேற்றப்பட்டுள்ளதா எனபது குறித்தும் ஆராயப்பட்டுள்ளது. எனினும் தற்போது வரை அவ்வாறு இடம்பெற்றதாக உறுதிப்படுத்தப்படவில்லை.

இதிலே உள்நாட்டில் தேங்காய் எண்ணை பாரிய அளவில் உற்ப்பத்தி செய்யப்படுகின்றது. நுகர்வு தேவை அதிகரித்தன் காரணமாகவே இந்த பாம் எண்ணை போன்றவை இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. ஆகவே இந்த விவகாரத்தில் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்தி கொள்ள வேண்டாமென பொதுமக்களிடம் கேட்டுக்கொள்கின்றோம்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!