சூயச் கால்வாயில் கப்பல் சிக்கியதற்கு இதுதான் காரணமாம்: வெளியான சுவாரஸ்ய தகவல்!

சூயச் கால்வாயில் கப்பல் சிக்கிக் கொண்டதற்கு பார்வோன்களின் சாபம்தான் காரணம் என இணையத்தில் ஒரு தகவல் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. சீனாவில் இருந்து நெதர்லாந்து நோக்கி பயணித்த சரக்கு கப்பல் ஒன்று, எகிப்து நாட்டில் உள்ள சூயஸ் கால்வாயில் கடந்த வாரம் சிக்கிக்கொண்டது. இதன் காரணமாக சுமார் 300-க்கும் மேற்பட்ட கப்பல்கள் தொடர்ந்து பயணிக்க முடியாமல் சிக்கிக்கொண்டன. இதனலால் பல கோடி ரூபாய் டொலர் இழப்பீடு ஏற்பட்டது.

தொடர்ந்து ஒரு வார முயற்சியின் பயனாக நேற்று கப்பல் விடுவிக்கப்பட்டது. இதற்கு பெளர்ணமி நாள் தான் காரணம் என்று கூறப்பட்டது.

இந்நிலையில், சூயஸ் கால்வாய் உள்பட எகிப்தில் அண்மையில் நடைபெற்று வரும் பிரச்சினைகளுக்கு பார்வோன்களின் சாபம்தான் காரணம் என்று கூறப்படுகிறது.

அதாவது, எகிப்து தலைநகர் கெய்ரோவின் தேசிய அருங்காட்சியகத்தில் இருக்கும் மம்மிக்களை வேறு இடத்துக்கு மாற்ற எகிப்து அரசு திட்டமிட்டுள்ளது. இது பார்வோன்களுக்கு பிடிக்கவில்லை எனவும், அவர்களின் சாபத்தால் சூயஸ் கால்வாய் முடங்கியதாக கூறுகின்றனர்.

மேலும், கடந்த வெள்ளிக்கிழமை எகிப்தில் இரண்டு ரயில்கள் மோதிக்கொண்டதில் 22 பேர் உயிரிழந்தனர். கெய்ரோவில் ஒரு கட்டிடம் இடிந்து விழுந்ததில் 23 பேர் உயிரிழந்தனர். இதற்கு எல்லாம் அதன் சாபம் தான் காரணமாம்.

ஆனால், தொல்லியல் துறை வல்லுனர்களோ, பார்வோன்களின் வரலாற்றுக்கு ஏற்ற பகுதிக்கு மம்மிக்கள் இடம் மாற்றப்படுவதால் அவர்களுக்கு மகிழ்ச்சியும், மரியாதையும்தான் கூடுமே தவிர சாபம் ஏற்படாது என தெரிவித்துள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!