வட மாகாண சுகாதார தொண்டர்களை 100,000 வேலை வாய்ப்புக்குள் உள்வாங்க ஜனாதிபதி பணிப்புரை

வட மாகாண சுகாதார தொண்டர் ஊழியர்களை ஒரு இலட்சம் வேலை வாய்ப்புக்குள் உள்வாங்க ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளதாக, நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளரும், யாழ்ப்பாணம் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.

அபிவிருத்திக் குழு தலைவர்களுடனான இன்றைய சந்திப்பின் போதே ஜனாதிபதி இந்த விடயத்தை தெரிவித்துள்ளதாக, அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!