சாவகச்சேரி பிரதேச சபை உறுப்பினருக்கு கத்தி குத்து!

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சாவகச்சேரி பிரதேச சபை உறுப்பினர் இராமநாதன் யோகேஸ்வரன் கத்திகுத்து தாக்குதலுக்கு உள்ளாகி படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நாவற்குழி 300 வீட்டுத்திட்ட பகுதியில் இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றது. அங்கு மோதல் சம்பவம் இடம்பெறுவதாக கிடைத்த தகவலினால் அங்கு சென்ற உறுப்பினர மீது கத்தியால் குத்தி, கற்களினால் தாக்கப்பட்டார் என்றும், படுகாயமடைந்த அவரை விடயம் அறிந்த அவருக்கு நெருக்கமானவர்கள் மீட்டு யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!