ஒரு நாட்டில் இரண்டு காவல்துறையா? – சர்ச்சையை தூண்டி விட்ட நெல்சன்.

நாட்டில் ஒரே சட்டம் இருந்தால், ஒரே காவல்துறைதான் இருக்க முடியும். போக்குவரத்து கடமைக்காக யாழ்ப்பாணத்தில் விடுதலைப் புலிகளின் காவல்துறையின் சீருடையில் இன்னொரு குழு களமிறக்கப்பட்டுள்ளது என எதிர்க்கட்சி உறுப்பினர் கிங்க்ஸ் நெல்சன் நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் இந்த விடயத்தில் கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.

இலங்கை ஒரே நாடு, ஒரே சட்டம் என அரசாங்கம் கூறுகிறது. நாட்டில் ஒரு காவல்துறை மட்டுமே உள்ளது. ஆனால், யாழ்ப்பாண மாவட்ட மேயர் போக்குவரத்தை கட்டுப்படுத்த ஒரு தனி குழுவை நியமித்துள்ளார்.

இந்த குழுவிற்கு விடுதலைப் புலிகளைப் போலவே ஒரு சீருடையும் வழங்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் கவனம் செலுத்தப்பட வேண்டும் என கிங்ஸ் நெல்சன் வலியுறுத்தியிருந்தார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் சமல் ராஜபக்ச நேற்று மாலை பாதுகாப்பு அமைச்சின் ஆலோசனைக் குழு கூட்டம் இடம்பெறும் என அறிவித்திருந்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!