உதயங்க நாடு திரும்புவார் – மஹிந்த ராஜபக்ஷ

இலங்கை அரசினால் தேடப்பட்டு வரும் நபரான ரஷ்யாவிற்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க தனது வேண்டுகோளின் பேரில் ஒரு மாத காலத்தில் நாடு திரும்புவார் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கதிர்காமம் கிரிவிகாரையில் மத வழிபாட்டில் ஈடுபட்ட பின்னர் ஊடகவியலாளர்களை சந்தித்தபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உதயங்க வீரதுங்கவிற்கு நாடு திரும்புமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். உதயங்க வீரதுங்கவிற்கு மிக் போர் விமான கொள்வனவில் ஊழலில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டின் பேரில் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது. உதயங்க வீரதுங்கவிற்கு எதிராக இன்டர்போல் சிவப்பு அட்டை பிறப்பிக்கப்பட்டபோதும் வீரதுங்கவை நாட்டிற்குக் கொண்டுவரவில்லை என அவர் மேலும் குறிப்பிட்டார்.

மேலும் தேர்தல் அச்சம் காரணமாக கோத்தாபய ராஜபக்ஷவிற்கு அரசாங்கம் பங்கம் விளைவிப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!