எதிர்காலத்தில் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு பாதகமேற்படும் வகையில் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாது: தயாசிறி கருத்து!

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு எதிர்காலத்தில் பாதகமேற்படும் வகையில் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாது கட்சியின் பொதுச் செயலாளர் ராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

மாகாணசபை தேர்தல் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு எதிர்காலத்தில் பாதகமேற்படும் வகையில் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாது. அதற்கு ஒருபோதும் இடமளிக்கமாட்டோம். ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆதரவாளர்கள் பலர் உள்ளனர். 161 தொகுதி அமைப்பாளர்கள் உள்ளனர். அவர்களுக்கும் நியாயமான அனைத்து அதிகாரங்களும் வழங்கப்பட வேண்டும். எனவே அனைத்த விடயங்களையும் தீர்மானித்தே மாகாண சபை தேர்தலில் எமது தீர்மானங்களை நாம் எடுப்போம்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!