மியான்மரில் தொடரும் கொடூரம்: 700 பேர் பலி – ஒரே நாளில் 82 பேர் சுட்டுக்கொலை!

மியான்மரில் ராணுவத்தால் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 700 ஆக உயர்ந்துள்ளதாக மியான்மர் அரசியல் கைதிகள் நல அமைப்பு தெரிவித்துள்ளது. வெள்ளிக்கிழமை மட்டும் ஒரே நாளில் 82 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக உள்ளூர் செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. இராணுவ ஆட்சிக்குழுவிற்கு எதிரான போராட்டங்கள் ஞாயிற்றுக்கிழமையும் தொடர்ந்தன.

மட்டுமின்றி ராணுவ ஆட்சிக்குழு மிகக் குறைந்த எண்ணிக்கையிலான இறப்புகளைப் பற்றி தகவல் வெளியிட்டு வருகிறது.

ராணுவ செய்தித் தொடர்பாளர் ஒருவர் வெள்ளிக்கிழமை வரை பலியான பொதுமக்களின் எண்ணிக்கை 248 என்றே தெரிவித்துள்ளார்.

மேலும், மியான்மர் இராணுவ ஆட்சிக்குழு இப்போது செல்லுலார் நெட்வொர்க்கை மொத்தமாக முடக்கி வருவதால்,

பொலிஸ் மற்றும் ராணுவ அத்துமீறல்கள், இறப்புச் செய்திகளை வெளிக்கொண்டு வருவது கடினமாகி வருகிறது.

82 பேர் கொல்லப்பட்ட பாகோ பகுதியில் நடந்த ஆர்ப்பாட்டம் மற்றும் ராணுவ நடவடிக்கைகளுக்கு பின்னர், லொறி ஒன்றில் சடலங்களை மீட்டு ராணுவத்தினர் சிலர் அங்கிருந்து வெளியேறியதாக கூறப்படுகிறது.

இதனிடையே, மீட்புப் பணியாளர்கள் இறந்தவர்களின் அருகில் வர அனுமதிக்கப்படவில்லை என கூறப்படுகிறது. மட்டுமின்றி, பல குடியிருப்பாளர்கள் வன்முறையை அடுத்து அருகிலுள்ள கிராமங்களுக்கு தப்பிச் சென்றனர்.

மியான்மரில் உள்ள ஐக்கிய நாடுகளின் அலுவலகம் பாகோவின் நிலைமையை நெருக்கமாக கண்காணித்து வருவதாக தெரிவித்துள்ளது.

80கும் மேற்பட்டவர்கள் படுகொலை செய்யப்பட்ட நிலையில், காயமடைந்தவர்களுக்கு எந்த உதவியும் வழங்கப்படவில்லை என்றே தகவல் வெளியாகியுள்ளது.

மியான்மரில் இராணுவம் ஆட்சியை கைப்பற்றிய பின்னர் 64 ஊடகவியலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர், அவர்களில் 33 பேர் ஞாயிற்றுக்கிழமை வரை காவலில் இருந்ததாக ஆசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!