சர்வதேச அதிகாரப் போட்டிக்கு எம்மைப் பலிகடா ஆக்காதீர்! – என்கிறார் நாமல்

சர்வதேச அதிகாரப் போட்டியில் நாடுகளைப் பலிக்கடா ஆக்குவது தவிர்க்கப்பட வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ கூறியுள்ளார்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது சீன அரசாங்கத்தினால் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு பாரிய நிதி அன்பளிப்புச் செய்யப்பட்டதாக நியூயோர்க் டைம்ஸ் செய்தி வௌியிட்டிருந்தது.

அதற்குப் பதிலளிக்கும் வகையில் நாமல் ராஜபக்‌ஷ தன் ட்விட்டர் கணக்கில் பதிவொன்றை இட்டுள்ளார். “ குறித்த பத்திரிகையின் செய்தி ஏற்றுக் கொள்ளத்தக்கது அல்ல. உலக நாடுகளின் கப்பல் போக்குவரத்து வழித்தடத்தில் முக்கியமான இடத்தில் ஹம்பாந்தோட்டை துறைமுகம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. சீனா இந்த விடயத்தில் உதவியதனை சில நாடுகளினால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. எனினும் சர்வதேச அதிகாரப் போட்டியில் எந்தவொரு நாட்டின் நலனும் பலிக்கடா ஆக்கப்பட முடியாது. அவ்வாறான விடயங்கள் தவிர்ந்து கொள்ளப்பட வேண்டும்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!