ஈஸ்டர் தாக்குதலுக்கு சஜித், கூட்டமைப்பு, ஜேவிபியே பொறுப்பு!

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஜேவிபி என்பன பொறுப்புக் கூற வேண்டும் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரியை மறைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்வதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவிக்கும் குற்றச்சாட்டு பாரதூரமானதெனவும் அவர் தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று சுமார் ஒரு வருடங்களுக்கு மேலாக நல்லாட்சி அரசாங்கமே ஆட்சியில் இருந்தது. அந்தக் காலப்பகுதியில் அவர்களுக்கு பிரதான சூத்திரதாரியை கண்டறிய முடியாமல் போனது.

இந்த நிலையில், நாட்டினதும், நாட்டு மக்களினதும் பாதுகாப்பை கருத்திற் கொண்டு, செயற்பட வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும்.

எனினும், நல்லாட்சி அரசாங்கம் அதனை மேற்கொள்ளவில்லை. நல்லாட்சி அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்கிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஜேவிபியும் இந்த குற்றச்சாட்டுக்களிலிருந்து விலகிக் கொள்ள முடியாது எனவும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மேலும் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!