பிலவ வருடம் அனைவருக்கும் புது விடியலைத் தருவதாக அமைய வேண்டும் – அங்கஜன் இராமநாதன்

பிலவ” வருடப்பிறப்பு தடைகளைத் தகர்த்தி நாட்டு மக்கள் அனைவருக்கும் புது விடியலைத் தருவதாக அமைய வேண்டுமென நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளரும் யாழ் மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவருமான அங்கஜன் இராமநாதன் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்-சிங்கள புதுவருட தின வாழ்த்துச் செய்தியில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்

சவால்களை முறியடித்து அபிவிருத்தியை முன்னெடுத்து அதனூடாக நாட்டு மக்களின் வாழ்வில் ஒளியேற்ற பிலவ வருடம் உறுதுணையாக அமைய வேண்டுமென தாம் பிரார்த்திப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்

மலர்ந்துள்ள புத்தாண்டு நாட்டு மக்கள் அனைவருக்கும் மகிழ்ச்சி சுபீட்சம் நோய் நொடியற்ற புது வாழ்வை தருவதாக அமைய வேண்டும் எனவும் புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!