முள்ளிவாய்க்கால் விபத்தில் இராணுவச் சிப்பாய் பலி!

முல்லைத்தீவு – முள்ளிவாய்க்கால் பகுதியில் நேற்று முன்தினம் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த இராணுவ சிப்பாய் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். கெப்பற்றிக்கொலாவ பகுதியினை சேர்ந்த 37 வயதுடைய சிப்பாய் ஒருவர் விடுமுறையில் உந்துருளியில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்த வேளை முள்ளிவாய்க்கால் பகுதியில் கப் வாகனம் மோதியுள்ளது.

இதன்போது காயமடைந்த சிப்பாய் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ் பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டபோது அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார்.

விபத்தினை ஏற்படுத்திய கப் சாரதி வாகனத்தை கைவிட்டு தப்பி ஓடியுள்ளார், அவரை பொலிஸார் தேடி வருகின்றனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!