மோட்டார் சைக்கிளில் அகப்பட்டு ஒன்றரை வயதுக் குழந்தை பலி!

சாவகச்சேரி – மட்டுவில் துா்க்கைம்மன் கோவில் பகுதியில் உள்ள வீடொன்றில் எட்டு வயதுச் சிறுவன் ஒருவன் மோட்டார் சைக்கிளை இயக்கிய வேளை அருகில் இருந்த அவரது சகோதரியான ஒன்றரை வயதுக் குழந்தை சில்லுக்குள் சிக்குண்டு உயிரிழந்துள்ளது.

சம்பவத்தில் கஜேந்திரன் சுவேசனா என்ற குழந்தையே உயிரிழந்தது.

வீட்டின் முன்பாக நிறுத்தப்பட்டிருந்த தாயாரின் ஸ்கூட்டி ரக மோட்டார் சைக்கிளை 8 வயதுச் சிறுவன் விளையாட்டாக இயக்கியுள்ளார். இதன்போது மோட்டார் சைக்களில் சீறிப் பாய்ந்து கிழே விளையாடிக்கொண்டிருந்த ஒன்றரை வயது குழந்தையின் வயிற்றின் மேல் ஏறியது. இதனையடுத்து சம்பவ இடத்திலேயே சிறுமி உயிரிழந்தார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!