அடுத்த 2 வாரங்கள் மிகவும் சவாலானது: சுகாதாரத்துறை செயலாளர் எச்சரிக்கை!

கொரோனா தடுப்பூசி குறித்து வீண் வதந்திகளை பரப்ப வேண்டாம் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார். முகக்கவசம் அணிந்தால் மட்டுமே கொரோனா தொற்று பரவாமல் கட்டுப்படுத்த முடியும். 2.07 லட்சம் கோவாக்சின் தடுப்பூசி கையிருப்பில் உள்ளது.

9.44 லட்சம் கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசி மருந்துகள் கையிருப்பில் உள்ளது. கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதில் அடுத்த 2 வாரங்கள் மிகவும் சவாலானது எனவும் கூறினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!