பல்கலைக்கழகங்களை மீள திறக்கும் திகதியில் மாற்றம்!

நாட்டின் அனைத்து பல்கலைக்கழகங்களையும் மீள திறக்கும் தீர்மானம் எதிர்வரும் இரண்டுவாரங்களுக்கு பிற்போடப்பட்டுள்ளது.

நாட்டின் தற்போதைய நிலைமையினை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக கல்வி அமைச்சர் ஜீ எல் பீரிஸ் தெரிவித்துள்ளார்

இதேவேளை நாட்டின் அனைத்து பல்கலைக்கழகங்களும் எதிர்வரும் 27ஆம் திகதி முதல் மீள திறக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு முன்னதாக அறிவித்திருந்தது.

அத்துடன், விடுதிகளை மீண்டும் திறப்பது தொடர்பில் தற்போது காணப்படும் பிரச்சினைகளை கருத்தில் கொண்டு முதல் கட்டமாக மூன்றாம் மற்றும் நான்காம் ஆண்டு மாணவர்களுக்கு மாத்திரம் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

மேலும், முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவர்களை பல்கலைக்கழகங்களுக்குள் அனுமதிப்பது தொடர்பில் பின்னர் அறிவிக்கப்படுமெனவும் அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்திருந்தார்

இந்த நிலையிலேயே .பல்கலைக்கழகங்களையும் மீள திறக்கும் தீர்மானம் எதிர்வரும் இரண்டுவாரங்களுக்கு பிற்போடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் இன்று அறிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!