மைத்திரியுடன் பசில் இரகசிய பேச்சு!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நிறுவுநர் பசில் ராஜபக்ச, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர்களுடன் அவசர கலந்துரையாடல்களை நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சந்திப்பு கடந்த 21ம் திகதி இடம்பெற்றதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த கலந்துரையாடலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன, பொதுச்செயலாளர் தயசிறி ஜயசேகர, அமைச்சர்களான நிமல் சிறிபாலா டி சில்வா, மஹிந்த அமரவீர மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேன் ராகவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதன்போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கீழ்மட்ட உறுப்பினர்களுக்கு இடமளிக்க தவறியமை தொடர்பில் பசில் ராஜபக்சவிடம் சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் எடுத்துரைத்துள்ளனர்.

இந்நிலையில், குறித்த விடயம் தொடர்பாக கட்சியிடமிருந்து திட்டங்களை சமர்ப்பிக்குமாறு பசில் ராஜபக்ச, அமைச்சர் மஹிந்த அமரவீரவிடம் கேட்டுக்கொண்டுள்ளதாக அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!