ஜப்பானில் 35 பெண்களை காதலித்து ஏமாற்றி சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்த இளைஞன்!

ஜப்பானில் 39 வயது மதிக்க நபர், 35 பெண்களை ஏமாற்றி அவர்களுடன் டேட்டிங் வாழ்க்கை வாழ்ந்து வந்த நிலையில், அவர் தற்போது பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். ஜப்பானின் Kansai மாகாணத்தின் ஒரு நிலையான முகவரி இல்லாத, பகுதி நேர வேலை செய்து வரும் Takashi Miyagawa என்ற 35 வயது நபர், தன்னுடைய பிறந்த நாளை வேவ்வேறு நாட்களாக கூறி, 35 பெண்களை ஏமாற்றி டேட்டிங் வாழ்க்கை வாழ்ந்துள்ளார்.

இதையடுத்து, இவரின் பித்தலாட்டத்தை அறிந்த அந்த பெண்கள் பொலிசில் கொடுத்த புகாரின் அடிப்படையில், அவர் இப்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

47 வயது மதிக்கத்தக்க Miyagwa என்ற பெண்ணிடம், தனது பிறந்த நாளை பிப்ரவரி 22 என்றும், அதே போன்று 40 வயது மதிக்கத்த மற்றொரு காதலித்த பெண்ணிடம் தன்னுடைய பிறந்தநாள் ஜுலை மாதம் எனவும், மூன்றாவது காதலியிடம் ஏப்ரல் மாதம் எனவும், இப்படி 35 பெண்களை காதலித்து ஏமாற்றியுள்ளார்.

இப்படி காதலித்து ஏமாற்றப்பட்ட பெண்கள் மூலம் அந்த நபர் சுமார் 665 டொலர் மதிப்புள்ள பணம், உடைகள் மற்றும் பரிசுப் பொருட்களை பெற்றுள்ளான்.

ஆனால், உள்ளூர் ஊடகமோ 35 பெண்கள் இல்லை, அதற்கும் மேற்பட்ட பெண்கள் இவரால் பாதிக்கப்பட்டுள்ளனர், தொடர் விசாரணைக்கு பின்னரே பல உண்மைகள் தெரியவரும் என்று குறிப்பிட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!