தமிழகத்தில் கடுமையாக்கப்பட்ட கொரோனா கட்டுப்பாடுகள்!

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். நேற்று ஒரே நாளில் 15 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் திங்கள் முதல் சனி வரை இரவு நேர ஊரடங்கும், ஞாயிறன்று முழுநேர ஊரடங்கும் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று முதல் கூடுதல் கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

இன்று முதல் திரையரங்குகள் மூடப்பட வேண்டும், வழிபாட்டு தலங்களில் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது, பெரிய கடைகள் வணிக வளாகங்கள் மால்கள் மூடப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹோட்டல்களில் பார்சல் மட்டுமே அனுமதி என்றும் காலை 6 மணி முதல் 9 மணி வரையிலும், மதியம் 12 மணி முதல் 3 மணி வரையிலும் மாலை 6 மணி முதல் 9 மணி வரையிலும் மட்டும் பார்சல் பகுதி மட்டுமே ஓட்டல்களில் இயங்கவேண்டும். டீக்கடைகளில் பார்சலுக்கு மட்டுமே அனுமதி உண்டு.

ஆட்டோக்களில் இரண்டு பேருக்கு மட்டும் அனுமதி உண்டு என்பதும் கார்களில் மூன்று பேர்களுக்கு மட்டுமே அனுமதி உண்டு என்பதும் குறிப்பிடத்தக்கது. இவ்வாறு பல்வேறு கட்டுப்பாடுகளை இன்று முதல் தமிழக அரசு விதித்துள்ள நிலையில் வரும் நாட்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறையும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!