கட்சி சின்னம் குறித்து சுதந்திரக்கட்சி விடுத்துள்ள தகவல்..!

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கட்சியின் சின்னத்தை மாற்றுவது தொடர்பில் தீர்மானிக்கவில்லை என ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது.

எதிர்காலத்தில் எந்தவொரு அரசியல் கட்சியுடனும் கூட்டணி உருவாக்கும் பட்சத்தில் கட்சியின் சின்னத்தை மாற்றுவதற்கு தீர்மானிக்கவில்லை என கட்சியின் பொதுச் செயலாளர் ராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்

கை சின்னம் கட்சி மற்றும் கூட்டணியின் அடையாளமாக காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்

இதேவேளை மாகாண சபை தேர்தலில் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் போட்டியிடுவதற்காக கடந்த ஒரு வார காலப்பகுதிக்குள் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் ராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!