ஐரோப்பியாவில் தீக்கிரையாக்கப்பட்ட இளைஞர்: மர்ம நபர்கள் வெறியாட்டம்!

ஐரோப்பிய நாடான லாத்வியாவில் தன்பார் ஈர்ப்பாளரான இளைஞர் ஒருவர் உயிருடன் எரித்து கொல்லப்பட்ட சம்பவம் மக்களை கொந்தளிப்பில் ஆழ்த்தியுள்ளது. லாத்வியா நாட்டவரான 29 வயது Normunds Kindzulis என்பவரையே, மர்ம நபர்கள் உயிருடன் எரித்து கொன்றுள்ளனர்.

அவசர உதவிக்குழுவில் பணியாற்றிவரும் இளைஞர் Normunds Kindzulis, தன்பால் ஈர்ப்பாளர் என்பதாலையே மர்ம நபர்கள் அவரது குடியிருப்புக்கு நெருப்பு வைத்துள்ளனர்.

துரதிர்ஷ்டவசமாக அந்த விபத்தில் சிக்கி, படுகாயமடைந்த இளைனர் Normunds Kindzulis, சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார். இதனிடையே, இளைஞர் Normunds Kindzulis-ஐ காப்பாற்றும் நோக்கில் விரைந்த இன்னொரு தன்பார் ஈர்ப்பாளரும் தீ விபத்தில் சிக்கியதாக கூறப்படுகிறது.

இந்த விவகாரம் தொடர்பில் பொலிசார் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தன்பால் ஈர்ப்பு ஆதரவாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மட்டுமின்றி, சொந்த வீட்டுக்கு நெருப்பு வைத்து, இளைஞர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என முதலில் பொலிசார் வழக்கை விசாரிக்க மறுத்ததாக கூறப்படுகிறது.

ஆனால் பொதுமக்களின் அழுத்தம் காரணமாக தற்போது விசாரிக்க ஒப்புக்கொண்டதாகவும் உள்ளூர் பத்திரிகை ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!