3வது மிகப்பெரிய அரசியல் கட்சியாக உருவெடுத்த நாம் தமிழர்: வாக்குகள் குறித்த முழு விவரம்!

2021 தமிழக சட்டமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி பெற்ற வாக்குகள் மற்றும் சதவிதம் குறித்த முழு விவரம் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் நடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, மநீம-சமக-ஐஜேகே கூட்டணி, அமமுக-தேமுதிக கூட்டணி மற்றும் நாம் தமிழர் கட்சி என 5 முனை போட்டி நிலவியது. எனினும், வாக்கு எண்ணிக்கை முடிந்த நிலையில் திமுக கூட்டணி 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியை கைப்பற்றியுள்ளது.

மே 7ம் திகதி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக முதல்வராக பதவியேற்கவுள்ளார். தமிழ்தேசிய தத்துவத்தை முன்வைத்து 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி தற்போதைய நிலவரப்படி, மொத்தம் 30,37,488 வாக்குகள் பெற்று தமிழகத்தின் 3வது அரசியில் கட்சியாக வளர்ந்துள்ளது.

தமிழகத்தில் மொத்தம் பதிவான வாக்குகளில் 7% வாக்குகளை நாம் தமிழர் கட்சி பெற்றுள்ளது. வாக்கு எண்ணிக்கை முழுமையாக முடிவடையும் போது இது 8 சதவிதமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதிகபட்சமாக திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிட்டு 3வது இடம்பிடித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் 48,597 (24.3%) வாக்குகள் பெற்றார்.

அவரை தொடர்ந்து, சோழிங்கநல்லூரில் 3வது இடம் பிடித்த மைக்கேல் 38,872 (10.01%) வாக்குகள், தூத்துக்குடியில் 3வது இடம் பிடித்த வேல்ராஜ் 30,937 (16.42%) வாக்குகள் பெற்றனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!