இன்பருட்டியில் 35 கிலோ கஞ்சாவை பதுக்கி வைத்திருந்த இளைஞன் கைது!

பருத்தித்துறை இன்பருட்டியில் கஞ்சா போதைப் பொருளை வீட்டில் பதுக்கி வைத்திருந்த குற்றச்சாட்டில் 20 வயது இளைஞன் பருத்தித்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரிடமிருந்து 35 கிலோ கிராம் கஞ்சா போதைப் போருள் கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். விசாரணைகளின் பின்னர் சந்தேக நபர் பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!