கிளிநொச்சியில் கட்டுக் கட்டாக சிக்கிய கள்ளநோட்டுகள்

கிளிநொச்சியில் எட்டு இலட்சத்துப் பத்தாயிரம் ரூபா மதிப்புள்ள 1000 ரூபா போலி நாணயத்தாள்களுடன் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கிளிநொச்சி பொலிஸ் விசேட பிரிவுக்குக் கிடைத்த தகவலிற்கு மைவாக நேற்று மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபர் போலி நாணயத்தாள்களை சந்தேகத்திற்கிடமான வகையில் பையில் எடுத்துச் செல்லப்படுகின்றமை தொடர்பில் பொலிஸ் விசேட பிரிவுக்குத் தகவல் கிடைத்துள்ளது.

இதனை அடுத்து பொலிஸ் விசேட பிரிவினரால் பொலிஸாரால் தகவல் வழங்கப்பட்டுள்ளது. இதனை அடுத்துக் குறித்த சந்தேகநபரை பொலிஸார் சோதனையிட்டுள்ளனர்.

இதன்போது குறித்த பையில் சுமார் 8 லட்சத்திற்கு அதிக பெறுமதி கொண்ட போலி நாணயத்தாள்கள் காணப்பட்டுள்ளது. அதனை மீட்ட பொலிஸார் சந்தேக நபரையும் கைது செய்துள்ளனர்.

குறித்த சந்தேக நபர் கிளிநொச்சி சாந்தபுரம் பகுதியைச்சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தை எனவும், சம்பவம் தொடர்பான பூர்வாங்க விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, குறித்த போலி நாணயத்தாள்களின் பெறுமதி தொடர்பில் கணக்கிடப்பட்டு வருவதாகவும் பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!