N440K கொரோனா அதிக பாதிப்பை ஏற்படுத்தும்: ஆய்வாளர்கள் எச்சரிக்கை!

தென்னிந்தியாவில் கடந்த ஆண்டு கண்டறியப்பட்ட N440K கொரோனா வகை என்பது மற்ற வகைகள் விட குறைந்தபட்சம் 15 மடங்கு அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்துவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்தியாவில் தற்போது கொரோனா பரவலின் 2ஆம் அலை தொடங்கியுள்ளது. மகாராஷ்டிரா, டெல்லி போன்ற மாநிலங்களில் கொரோனா 2ஆம் அலை மெல்ல குறைந்து வருகிறது.

அதேநேரம் தமிழ்நாடு, கர்நாகடாக போன்ற தென் மாநிலங்களில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தென் மாநிலங்களில் கண்டறியப்பட்ட N440K கொரோனா வகை மற்ற வகைகள் விட குறைந்தபட்சம் 15 மடங்கு அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்துவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஆண்டு கொரோனா பரவல் முதல் அலைக்குப் பின்னர் தென்னிந்தியாவின் பல பகுதிகளில் இந்த கொடிய N440K கொரோனா வகை கண்டறியப்பட்டதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். தென் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் இந்த கொரோனா முக்கிய பிரச்சனையாக உருவெடுத்தது.

இப்படிதான் கொரோனா பரவுகிறது.. ஜாக்கிரதையா இருங்க.. உலக சுகாதார மையம் புதிய வழிகாட்டுதல்கள் வெளியீடு

இருப்பினும், அதன் பின்னர் இந்த கொரோனா வகை தாக்கம் குறைந்துவிட்டது. தற்போது கொரோனா 2ஆம் அலையில் பிரிட்டன் வகை கொரோனா தொற்றும் இரட்டை மரபணு மாறிய வைரசுமே அதிகம் கண்டறியப்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கொடிய உயிரிழப்புகளை ஏற்படுத்தும் இந்த N440K வகை கொரோனா மட்டும் வேகமாகப் பரவியிருந்தால் உயிரிழப்புகள் நாட்டில் இன்னும் பல மடங்கு அதிகரித்திருக்கும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!