கோவிட்-19: 66,000 துணை ராணுவ படை வீரர்கள் பாதிப்பு!

நாடு முழுவதும் கொரோனாவின் தீவிரம் வேகமாக பரவி வருகிறது. நாள்தோறும் மக்கள் கொத்து கொத்தாக உயிரிழந்து வருகின்றனர். மருத்துவமனைகளில் படுக்கைகள் இல்லாமல் ஆம்புலன்ஸ்களிலும் வாகனங்களிலும் சாலையோரங்களிலும் நோயாளிகள் காத்திருக்கும் காட்சிகள் நெஞ்சை பிழக்கும் விதமாக உள்ளது.

இந்த நிலையில் தற்போது துணை ராணுவப் படையிலும் கொரோனாவின் தாக்கம் ஏற்பட்டுள்ளது. துணை ராணுவ படைகளில் இதுவரை 66 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் தற்போது 7 ஆயிரத்து 900 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இதனிடையே, கொரோனா பாதிப்புக்கு என்.எஸ்.ஜி என அழைக்கப்படும் தேசிய பாதகாப்பு படையில் முதல் உயிர் பலி ஏற்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேசிய பாதுகாப்பு படை கமாண்டோ அதிகாரியாக இருந்தவர் பி.கே.ஜா(53). இவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு நொய்டாவில் உள்ள மத்திய ஆயுதப்படை காவல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில் சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று காலையில் அவர் உயிரிழந்தார். இதனால் ராணுவ அதிகாரிகள், ராணுவ வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றால் தேசிய பாதுகாப்பு படையில் முதல் உயிர்ப்பலி இதுவாகும்

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!