மற்றவர் மூக்கில் விட்ட குச்சிகளை கொண்டு 9000 பேருக்கு கொரோனா சோதனை: வெளிச்சத்திற்கு வந்த உண்மை!

இந்தோனேசியாவில் விமான பயணிகளுக்கு கொரோனா சோதனை மேற்கொள்ள எற்கனவே வேறொருவர் மூக்கில் விட்டப்பட்ட குச்சிகளை கழுகி மீண்டும் புதிது போல் விற்ற மருத்து நிறுவனத்தைச் சேர்ந்த ஊழியர்கள் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள பல நாடுகளில் (Covid nasal swab test) மூக்கு அல்லது தொண்டையில் இருந்து, நுனியில் பஞ்சு கொண்ட ஒரு குச்சி மூலமாக எடுக்கப்பட்ட சளி மாதிரியை பரிசோதனைக்கு உட்படுத்துவது வழக்கமாகிவிட்டது.

இந்நியைில் இந்தோனேசியாவின் வடக்கு சுமத்ராவின் மேடனில் உள்ள Kualanamu விமான நிலையத்தில் பயணிகளு்ககு Covid nasal swab test எடுப்பத்தில் மாபெரும் ஊழல் நடந்திருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இந்தோனேசியாவில் பயணிகள் விமானத்தில் பயணிக்க வேண்டுமென்றால் கொரோனா இல்லை என்ற சோதனை முடிவை வழங்க வேண்டும்.

இதனால், விமான நிலையங்களிலே கொரோனா சோதனை மேற்கொள்ளும் வகையில் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பயணிகளுக்கு கொரோனா சோதனை மேற்கொள்ள, அரசுக்கு சொந்தமான Kimia Farma மருந்து நிறுவனம் விநியோகம் செய்த ஆன்டிஜென் விரைவான சோதனை கருவிகளை விமான நிலைய அதிகாரிகள் பயன்படுத்தி வந்தனர்.

இந்நிலையில், கொரோனா பாதிப்பு இருப்பதாக சோதனையில் தவறான முடிவு வந்திருப்பதாக பல பயணிகள் புகார் அளித்தததை அடுத்து, கடந்த வாரம் பொலிசார் Kualanamu விமான நிலையத்திற்கு ரகசிய அதிகாரி ஒருவரை பயணி போல் அனுப்பியுள்ளனர்.

அவருக்கு குச்சியின் மூலம் மூக்கிலிருந்து சளி மாதிரி எடுக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டதில் கொரோனா இருப்பதாக முடிவு வந்துள்ளது.

இதனையடுத்து, மற்ற அதிகாரிகள் உடனடியாக சோதனை நடத்தும் மையத்தில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

அப்போது அங்கு ஏற்கனவே சோதனைக்கு பயன்படுத்தப்பட்ட மூக்கு குச்சிகள் கழுவி மீண்டும் பயன்படுத்துவதற்கு வைக்கப்பட்டிருந்ததை கண்டுபிடித்துள்ளனர்.

இதுதொடர்பில் கடந்த வாரம் Kimia Farma மருந்து நிறுவனத்தில் பணியாற்றும் பல ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு பயன்படுத்திய குச்சிகளை கழுவி மீண்டும் பயன்படுத்தியதின் மூலம், சுமார் 1.8 பில்லியன் இந்தோனேசிய ரூபியா (1,24,800 டொலர்) ஊழல் நடந்திருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

மேடனில் Kualanamu விமான நிலையத்தில் மட்டும் சுமார் 9000 பயணிகளுக்கு ஏற்கனவே பயன்படுத்தி மூக்கு குச்சிகளின் மூலம் சோதனை மேற்கொள்ளப்பட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.