கொரோனாவால் பாதிக்கப்பட்ட முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர்!

தமிழக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சராக இயங்கிவந்த டாக்டர். விஜயபாஸ்கருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் , “கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் எனக்கு பாசிட்டிவ் என்று வந்துள்ளது. அதனால் என்னை நானே தனிமைப் படுத்திக் கொண்டேன். என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை செய்து கொள்ளுங்கள். கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பாதுகாப்பாக இருங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் விராலிமலை தொகுதியில் போட்டியிட்ட விஜயபாஸ்கர் தீவிர பரப்புரை மேற்கொண்டு வந்தார். இதையடுத்து அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அத்துடன் அமைச்சராக இருந்த விஜயபாஸ்கர், கொரோனா பேரிடர் காலத்தில், பலரும் பாராட்டும் வகையில் சிறப்பாக பணியாற்றினார். அத்துடன் தற்போது புதிதாக அமைய உள்ள அரசுக்கு கொரோனா தடுப்பு நடவடிக்கையில் உடனிருந்து பணிபுரிவதாகவும் அவர் உறுதியளித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!