பாடசாலைகளை மறுஅறிவித்தல் வரை மூடுவதற்கு தீர்மானம்..!

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளையும் மறுஅறிவித்தல் வரை மூடுவதற்கு தீர்மானிக்கபட்டுள்ளதாக கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

நாட்டில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ளதை கவனத்தில் கொண்டு, இன்றைய தினம் வரையில் பாடசாலைகளை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள தொற்றுப்பரவல் மேலும் அதிகரித்து வருவதை காரணமாக கொண்டு மறுஅறிவித்தல் வரை பாடசாலைகளை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கபட்டுள்ளது.

அத்துடன், பாலர் பாடசாலைகள், தனியார் கல்வி நிறுவனங்கள், பல்கலைகழகங்கள் என்பனவும் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டிருக்கும் எனவும் கல்வி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, அறநெறி பாடசாலைகள் மற்றும் கத்தோலிக்க பாடசாலைகள் என்பனவும் இவ்வாறு மறு அறிவித்தல் வரை மூடப்பட்டிருக்கும் எனவும் அறிவிக்கபட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!