கட்டுப்பாடுகளை கடுமையாக்கும் பிரான்ஸ்!

பிரான்சில் நாளை நள்ளிரவு முதல் குறிப்பிடப்படும் சில நாடுகளில் இருந்து வந்தால், 10 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய நாடுகளில் கொரோனா பரவல் இப்போது மெல்ல, மெல்ல குறைந்து வருகிறது. கொரோனாவால் ஏராளமான பாதிப்பை சந்தித்துள்ள பிரான்ஸ், இந்த முறை மிகவும் கவனமாக ஊரடங்கு, தடுப்பூசி போன்றவைகளில் மிகுந்த கவனம் செலுத்தி வருகிறது.

குறிப்பாக, பொது இடங்களில் முகக்கவசம் கட்டாயம், கொரோனா கட்டுப்பாடுகளை மீறினால், கடும் தண்டனை போன்றவை பிரான்சில் அமுலில் உள்ளது.

இந்நிலையில், இலங்கை உட்பட சில நாடுகளில் இருந்து பிரான்சுக்கு வருகை தந்தால் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவார்கள் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சட்டம் நாளை நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடுகளின் பட்டியல்

துருக்கி

இந்தியா

பிரேசில்

வங்கதேசம்

இலங்கை

பாகிஸ்தான்

நேபாளம்

ஐக்கிய அரபு அமீரகம்

கத்தார்

மேலே குறிப்பிடப்பட்டுள்ள இந்த எழு நாடுகளில் இருந்து வருபவர்கள் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவர். அப்படி ஏமாற்ற நினைத்தால், கடும் விளைவை சந்திக்க நேரிடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!