மேலும் சில பகுதிகள் உடன் அமுலாகும் வகையில் முடக்கம்

நாட்டில் கொரோனா தொற்று பரவல் காரணமாக ஆறு மாவட்டங்களைச் சேர்ந்த ஆறு கிராம சேவகர் பிரிவுகள் இன்று முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

இதன்படி, கொழும்பு மாவட்டத்திற்கு உட்பட்ட கொலமுன்ன மற்றும் மம்பே வடக்கு கிராம சேவகர் பிரிவுகளும், கம்பஹா மாவட்டத்திற்கு உட்பட்ட எலப்பிட்டிவல, நவம் மஹர மற்றும் மகுல் பொக்குன ஆகிய பகுதிகளும் இன்று காலை முதல் உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

அத்துடன், காலி மாவட்டத்தின் திக்கும்பர மற்றும் அத்தன்கித்த ஆகிய பகுதிகளும், இரத்தினபுரி மாவட்டத்தின் கட்டங்கே மூன்றாம் பிரிவு, கொடகம, தொபகாவின்னா மற்றும் சன்னஸ்கம ஆகிய கிராம சேவகர் பிரிவுகளும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

மேலும், ஹம்பாந்தோட்டை மாவட்டத்திற்கு உட்பட்ட சூரியவெவ நகரமும், கேகாலை மாவட்டத்திற்கு உட்பட்ட உடபொத மற்றும் கந்தாவ ஆகிய பகுதிகளும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

இதேவேளை, கம்பஹா மாவட்டத்திற்கு உட்பட்ட களுங்ஙல மற்றும் பொல்ஹேன ஆகிய கிராம சேவகர் பிரிவுகளும், களுத்தறை மாவட்டத்திற்கு உட்பட்ட அதிகாரிகொட கிராம சேவகர் பிரிவும், இன்று முதல் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!