ரூ.9 கோடி மதிப்புடைய போதைப்பொருளை வயிற்றில் மறைத்து கடத்தி வந்தவருக்கு சிறை

ரூ.9 கோடி மதிப்புடைய கொகைன் போதைப்பொருளை வயிற்றில் கடத்தி வந்து டெல்லியில் சிக்கிய கொலம்பியா நாட்டைச் சேர்ந்த நபரை போலீசார் சிறையிலடைத்தனர்.

டெல்லி சர்வதேச விமான நிலையத்தில் கடந்த 22-ம் தேதி கொலம்பியாவில் இருந்து வந்திறங்கிய நபர் பாதுகாப்பு சோதனைக்கருவி வழியாக வரும் போது, அவரது வயிற்றில் ஏதோ ஒரு பொருள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதை போலீசார் கண்டறிந்தனர். இதனை அடுத்து, அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அங்கு, அந்த நபரை எக்ஸ்ரே செய்து பார்த்ததில் 66 கேப்சூல்கள் வயிற்றில் மறைத்து வைக்கப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அடுத்து, அனைத்து கேப்சூல்களும் வெளியே எடுக்கப்பட்டன. ரூ.9 கோடி மதிப்பிலான 900 கிராம் கொகைன் அந்த கேப்சூல்களில் இருந்து எடுக்கப்பட்டது.

இதனை அடுத்து, அந்த நபரை போலீசார் நேற்று கைது செய்தனர். இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!