சீன தடுப்பூசி பாதுகாப்பானது: உலக சுகாதார நிறுவனம் கொடுத்த அங்கீகாரம்!

சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசி பாதுகாப்பானது என்று உலகசுகாதார நிறுவனம் அங்கீகரித்துள்ளது. உலகின் பல்வேறு நாடுகளில் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு, மக்களுக்கு போடப்பட்டு வருகிறது. அதன் படி, சீனாவில் கொரோனாவுக்கு எதிராக சைனோபார்ம் என்ற தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு, பயன்பாடடில் உள்ளது.

இந்நிலையில், இந்த தடுப்பூசி பாதுகாப்பானது மற்றும் பயனுள்ளது என்று உலக சுகாதார நிறுவனம் அங்கீகரித்துள்ளது.

இது குறித்து ஜெனீவாவில் உலக சுகாதார நிறுவனத்தின் உதவி தலைமை இயக்குனர் மரிய ஏஞ்சலா சிமாவோ கூறுகையில், சீனாவின் சைனோபார்ம் தடுப்பூசி கடுமையான கொரோனாவுக்கு எதிரான செயல் திறன்மிக்கது. இந்த தடுப்பூசி உலகளவில் பயன்படுத்தப்பட்டுள்ளது. 6 கோடியே 20 லட்சம் டோஸ்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இது பாதுகாப்பானது. செயல்திறன் மிக்கது என தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!