ஹார்லி டேவிட்சனுக்கு எச்சரிக்கை விடுக்கும் ட்ரம்ப்!!!

இருமுனை வரி நெருக்கடியால் அமெரிக்காவை விட்டு வெளியேற முடிவெடுத்துள்ள உலகின் முன்னணி ஹார்லி டேவிட்சன் நிறுவனத்துக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ட்விட்டர் மூலம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அமெரிக்காவுக்கு எதிராக உலக நாடுகள் வர்த்தக போரை தொடங்கியுள்ள நிலையில் இந்தியாவும், சீனாவும் தற்போது வர்த்தக அளவில் ஒன்றாக செயல்படும் வகையில் வரிகளை குறைப்பதாக அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றன. அதோடு அமெரிக்க பொருட்கள் மீதான வரிகளை அதிகரித்துள்ளன. இதனால் அமெரிக்க நிறுவனங்களுக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

உலகின் முன்னணி இருசக்கர மோட்டார் வண்டி தயாரிப்பு நிறுவனமான ஹார்லி டேவிட்சன் அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டுவருகிறது.

இந்நிறுவனம் இரும்பு, அலுமினியம் போன்ற மூலப்பொருட்களுக்கு அதிக வரி செலுத்தி இறக்குமதி செய்கிறது. தற்போது தயாரித்த இருசக்கர மோட்டார் வண்டிகளை ஏற்றுமதி செய்ய கூடுதல் வரியை செலுத்த வேண்டிய நிலை அந்நிறுவனத்திற்கு ஏற்பட்டுள்ளது. இருமுனை வரி நெருக்கடியால் ஹார்லி டேவிட்சன் நிறுவனத்திற்கு கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக அமெரிக்காவில் இருந்து வெளியேற இருப்பதாக ஹார்லி டேவிட்சன் நிறுவனம் அறிவித்தது. அத்தோடு ஆசியா அல்லது ஐரோப்பிய நாடுகளுக்கு தனது நிறுவனத்தை மாற்றவுள்ளதாகவும் கூறியுள்ளது.

ஹார்லி டேவிட்சன் நிறுவனத்தின் இந்த முடிவினால் அதிர்ச்சி அடைந்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப்..,

அமெரிக்காவில் இருந்து ஹார்லி டேவிட்சன் நிறுவனம் வெளியேற கூடாது என்றும், அந்த நிறுவனத்திற்காக அமெரிக்க அரசு நிறைய செய்துள்ளதாகவும் அவர் தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் ட்ரம்ப்பின் கோரிக்கையை ஹார்லி டேவிட்சன் நிறுவனம் மறுபரிசீலனை செய்ய தயாராக இல்லை என கூறப்படுகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!