கரீபியன் தீவில் உயிருடன் இருந்த பெண்ணுக்கு நடத்தப்பட்ட இறுதிச்சடங்கு!

டொமினிகன் குடியரசில் பெண் ஒருவர் உயிருடன் இருக்கும் போதே இறுதிச்சடங்கு செய்து பார்த்த நிகழ்வு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 59 வயது மதிக்கத்தக்க Mayra Alonzo என்ற பெண் கரீபியன் தீவின், Dominican Republic-ல் உள்ள Santiago நகரில் வசித்து வருகிறார். இந்நிலையில், இவர் தான் இறந்த பின்பு தன்னுடைய உறவினர்கள் எப்படி துக்கப்படுகின்றனர் என்பதை அறிய வேண்டும் ஆசை இருந்துள்ளது.

இதன் காரணமாக இவர் தன்னுடைய சொந்த செலவில் இறந்துவிட்டால் என்னென்னல்லாம் செய்வார்களோ அது போன்று இறுதுச்சடங்கிற்கான அனைத்து வேலைகளையும் செய்துள்ளார்.

அதன் படி வெள்ளை நிற ஆசை, மூக்குகளில் பஞ்சி, சவப்பெட்டியில் அவரின் உடல் என்று ஒரு உண்மையான இறுதிச்சடங்கிற்கான அனைத்து வேலைகளும் நடந்துள்ளது. அப்போது இவரது உறவினர்களும், அவர் இறந்துவிட்டால், எப்படி வேதனைப்படுவோ அதே போன்று கண்ணீர் விட்டு அழுது நடித்தனர்.

Mayra Alonzo சவப்பெட்டியில் நீண்ட நேரம் இருந்தார். இதற்காக அவர் 710 டொலர் செலவு செய்துள்ளார். இந்த ஆசை நிறைவேற நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரே காரணம், அவர்களுக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன்.

நான் இப்படி ஆசைப்பட்டதற்கு முக்கிய காரணம், இப்போது ஏற்படும் கொரோனா தொற்றினால், பலர் இறக்கின்றனர். அவர்களுக்கு நடத்தப்பட்டு வந்த இறுதிச்சடங்குகளை பார்த்த போது, தான் நாம் இதை உணர வேண்டும் என்ற எண்ணம் வந்தது, அதன் காரணமாகவே இப்படி செய்தேன் என்று கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!