மீண்டும் தாக்கிய இஸ்ரேல்: 150-க்கும் மேற்பட்டோர் பலி!

இஸ்ரேல் இன்று 30 நிமிடத்தில் காசாவில் 80 ஏவுகணைகளை விட்டு தாக்குதல் நடத்தியுள்ளதால், இதில் பலர் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே பயங்கர மோதல் நடைபெற்று வருகிறது. காசா முனை மற்றும் மேற்கு கரை என்று மொத்தம் இரண்டு பகுதிகளாக பாலஸ்தீனம் உள்ளது. காசா முனையை ஹமாஸ் என்ற போராளிகள் அமைப்பு தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.

இந்த அமைப்பை இஸ்ரேல் பயங்கரவாத அமைப்பாக கருதுகிறது. மேற்குகரை பகுதியின் பாலஸ்தீன அதிபராக முகமது அப்பாஸ் செயல்பட்டு வருகிறார். மேற்குகரையின் சில பகுதிகளை இஸ்ரேல் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.

காசா முனை பகுதியில் இருந்து இஸ்ரேல் நாட்டின் மீது ஹமாஸ் அமைப்பினர் அவ்வப்போது ராக்கெட் மற்றும் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்துவது வழக்கம். ஹமாஸ் தாக்குதலுக்கு இஸ்ரேல் இராணுவமும் தக்கபதிலடி கொடுத்து வருகிறது.

சமீபத்தில், ஜெருசலேமில் உள்ள பாலத்தீன மக்கள் தொழுகை நடத்தும் அல் அக்சா மசுதிக்குள் புகுந்து இஸ்ரேல் இராணுவத்தினர் தாக்குதல் நடத்தினர். இதனால் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக இஸ்ரேலுக்குள் காசாவில் உள்ள ஹமாஸ் போர்ப்படை தாக்குதல் நடத்தியது.

சிறிய ரக ராக்கெட்டுகளை வீசி ஹமாஸ் இஸ்ரேலுக்குள் தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இஸ்ரேல் காசாவில் கடந்த சில நாட்களாக ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தி வருகிறது.

இதனால் ஹமாஸ் அமைப்பை சேர்ந்த்வர்கள் மட்டும் உயிரிழப்பது இல்லாமல், அப்பாவி பொதுமக்களும் இதற்கு பலியாகி வருகின்றனர். ஆனால், இஸ்ரே பிரதமரோ, நாங்கள் தாக்குதலை நிறுத்தமாட்டோம், இது தொடரும் நேற்று கூறியிருந்த நிலையில், இன்று நள்ளிரவு காசாவில் 30 நிமிடத்திற்குள் 80 ஏவுகணைகளை விட்டு இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் அங்கிருக்கும் அரச கட்டிடங்கள், வீதிகள் மற்றும் குடியிருப்புகளை குறித்து வைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு ஆம்புலன்ஸ் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக காசாவில் இருக்கும் முக்கியமான Al-Shifaa மருத்துவமனைக்கு அருகேவும், அதைத் தொடர்ந்து காசாவிற்கு மின்சாரம் கொடுக்கப்படும் பகுதிக்கு அருகேயும் தாக்குதல் நடந்துள்ளது.

கடந்த சில நாட்கள் முதல், தற்போது வரை இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 158 பேர் உயிரிழந்திருப்பதாகவும், இதில் 43 குழந்தைகளும் அடங்கும் என்று அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் கூறுகின்றன. ஆனால், பலி எண்ணிக்கை இதை எல்லாம் விட அதிகமாவே இருக்கும் என்று கூறப்படுகிறது.

மேலும், காசாவில் இருக்கும் Alaa Shammala என்ற Journalist கடந்த 2014-ஆம் ஆண்டு Shejaiya-வுடன் நடந்த போரின் போது தன்னுடைய முதல் வீடு தரைமட்டம் ஆனதையும், அதே போன்று இப்போது 2021-ஆம் ஆண்டு இஸ்ரேல் தாக்குதலால் தன்னுடைய இரண்டாவது வீடு முற்றிலும் தரைமட்டம் ஆகி கிடப்பதுடன் இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!