முள்ளிவாய்க்காலில் சுடர் ஏற்றினார் வேலன் சுவாமி!

ல்லைத்தீவு- முள்ளிவாய்க்கால் பகுதியில், இறுதி யுத்தத்தில் உயிரிழந்த மக்களை நினைவு கூர்ந்து சிவகுரு ஆதீன குரு தவத்திரு வேலன் சுவாமிகள், சுடரேற்றி அஞ்சலி செலுத்தியுள்ளார்.

முள்ளிவாய்க்காலில் பயங்கரவாதத்தை தூண்டாத வகையிலும் கொரோனா கட்டுப்பாட்டு நடைமுறைகளை பின்பற்றி அஞ்சலி நிகழ்வை மேற்கொள்ளலாம் என முல்லைத்தீவு நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியிருந்தது.

இந்நிலையில் நேற்று இரவு முதல் முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு, முள்ளியவளை ஆகிய பொலிஸ் பிரிவுகள் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தனிமைப்படுத்தப்பட்டு முழு ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் இராணுவம் மற்றும் பொலிஸார் பலத்த கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள நிலையிலும் கூட வேலன் சுவாமிகளோடு இணைந்து பொதுமக்கள் சிலர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உறவுகளை நினைந்து அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

அத்துடன் முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற படுகொலையின் நினைவாக பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி மக்கள் பேரியக்கத்தால், ஒரு இலட்சத்து நாற்பத்தாறாயிரம் மரக்கன்றுகள் நாட்டும் திட்டத்துக்கு அமைவாக, முதலாவது ஆலமர கன்று ஒன்றினை குறித்த நிகழ்வின்போது வேலன் சுவாமிகள் நாட்டியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!