கொரோனா தொற்றாளர்கள் என சந்தேகிக்கப்படும் 6 பேர் தப்பியோட்டம்

கொரோனா தொற்றுக்குள்ளாகியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் சிகிச்சை பெற்று வந்த 03 பெண்கள் உள்ளிட்ட அறுவர் வைத்தியசாலையிலிருந்து தப்பிச்சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

நாகொடை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று இரவு இவர்கள் தப்பிச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது..

தப்பிச்சென்றவர்களில் பெண் ஒருவர் தொடர்பில் தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும், ஏனையவர்களை தேடும் நடவடிக்கையினை வைத்தியசாலை பொலிசார் முன்னெடுத்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!