பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்யுமாறு கோரிக்கை

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ரஜீவ் காந்தி கொலையுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஏழு பேரை விடுதலை செய்ய ஆணையிடுமாறு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.

அமைச்சரவைத் தீர்மானத்திற்கமைய குடியரசுத் தலைவர் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் மூலம் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

இதன்படி, ரஜீவ் காந்தி கொலையுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் பேரறிவாளன், நளினி உள்ளிட்ட ஏழு பேர் கடந்த 30 வருடங்கங்களுக்கு மேலாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும், சிறைச்சாலைகளில் கொரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் கைதிகளை விடுதலை செய்யுமாறு இந்திய உயர் நீதிமன்றம் உத்தறவிட்டுள்ளதாகவும் அவர் குறித்த கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நிலையிலே, பேரறிவாளன், நளினி உள்ளிட்ட ஏழு பேரை விடுதலை செய்வதற்கு உத்தரவிடுமாறு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை, இந்தியாவின் முன்னாள் பிரதமர் ரஜீவ் காந்தி கொலையுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஏழு பேரை விடுதலை செய்வதில் தமிழக காங்கிரஸ் கட்சிக்கு உடன்பாடு இல்லை என கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

இன்று இடன்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்துரைக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!