தமிழ் மொழி புறக்கணிப்பு – அலி சப்ரியை தொடர்பு கொண்ட அங்கஜன் இராமநாதன்

சட்டமா அதிபர் திணைக்களத்தில் புதிதாக அமைக்கப்பட்ட ஸ்மார்ட் நூலகத்தின் பெயர் பலகையில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டமை தொடர்பில் நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளரும் யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான அங்கஜன் ராமநாதன் நீதியமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார்,

நீதியமைச்சர் அலி சப்ரியை நேற்று தொலை பேசியில் தொடர்பு கொண்ட போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்,

இவ்வாறான செயற்பாடுகள் தமிழ் மக்களை அதிருப்திக்கு உள்ளாக்கும் எனவும் அங்கஜன் ராமநாதன் நீதியமைச்சர் அலி சப்ரியிடம் எடுத்துரைத்துள்ளார்.

எனவே இது தொடர்பில் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளர் அங்கஜன் ராமநாதன் நீதியமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளார்,

சட்ட மா அதிபர் திணைக்களத்தில் சீனாவின் நிதியுதவியில் நிர்மாணிக்கப்பட்ட ஸ்மார்ட் நூலகத்தின் பெயர் பலகையில் சிங்களம்,ஆங்கிலம் மற்றும் சீனமொழி ஆகியன காணப்பட்ட போதிலும் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டமை பாரிய விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது,

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!