உக்ரைன் பயணிகள் விமானம் சூட்டு வீழ்த்தப்பட்ட வழக்கு: அதிரடி தீர்ப்பளித்த கனடா நீதிமன்றம்!

176 உயிரை பலிவாங்கிய உக்ரைன் பயணிகள் விமானத்தை ஈரான் சுட்டு வீழ்த்திய வழக்கில் கனடாவின் Ontario உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது. 2020 ஐனவரி 8ம் திகதி தெஹ்ரானிலிருந்து புறப்பட்ட உக்ரைன் பயணிகள் விமானத்தை ஈரான் இராணுவம் சுட்டு வீழ்த்தியது. இதில், விமானத்தில் பயணித்த 167 பயணிகள் உட்பட 176 பேர் பலியாகினர்.

167 பயணிகளில் 55 கனடிய குடிமகன்கள் மற்றும் 33 கனடாவில் நிரந்திர குடியுரிமை கொண்டவர்கள் அடங்குவர். அதுமட்டுமின்றி 167 பயணிகளில் 138 பேர் கனடாவுடன் தொடர்புடையவர்கள் ஆவர்.

உக்ரைன் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது குறித்து ஈரானுக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கு விசாரணை Ontario உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற வந்தது.

இந்நிலையில், வியாழக்கிழமை உக்ரைன் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட வழக்கில் நீதிபதி Edward Belobaba தீர்ப்பளித்தார். அதாவது, ஈரானால் உக்ரைன் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது வேண்டுமென்றே நிகழ்த்தப்பட்ட பயங்கரவாத செயல் என்று நீதிபதி தீர்ப்பளித்தார்.

Canada’s State Immunity Act (SIA), Justice for Victims of Terrorism Act (JVTA) மற்றும் criminal code ஆகியவற்றின் கீழ் ஈரானிய அதிகாரிகள் பயங்கரவாதச் செயலைச் செய்ததாக வாதிகள் (விபத்தில் பலியானவர்களின் குடும்பங்களின் குழு) நிறுவியதாக நீதிபதி தீர்ப்பளித்தார்.

மேலும், பலியானவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் ஈரானுக்கு நீதிபதி உத்தவிட்டார்.

கனடா நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து ஈரான் அதிகாரிகள் தற்போது வரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!