போர்ட் சிட்டி வாகெடுப்பில் நடந்தது என்ன..? சபாநாயகர் விளக்கம்

கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு தொடர்பான சட்டமூலம் தொடர்பான வாக்கெடுப்பின் போது ஏதேனும் குறைப்பாடுகள் காணப்படுமாயின் அது தொடர்பில் ஆராயப்படும் என சபாநாயகர் மகிந்த யாப்பா அபயவர்தன தெரிவித்துள்ளார்.

வாக்கெடுப்பு தொடர்பில் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்படுவதனால் இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக சபாநாயகர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்

வாக்களிப்பின் போது ஆளும் தரப்பு உறுப்பினர்கள் இருவரின் வாக்களிப்பு கணக்கெடுக்கப்படவில்லை என குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் சபாநாயகர் தெரிவித்துள்ளார்

குறித்த வாக்குகள் உரிய முறையில் கணக்கிடப்பட்டிருந்தால் குறித்த சட்ட மூலம் மூன்றில் இரண்டு மேலதிக வாக்குகளுடன் நிறைவேறியிருக்கும் என ஆளும் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்திருந்தார்..

இதேவேளை வாக்களிக்கும் போது அவதானத்துடன் செயற்படுமாறும் ஆளும் எதிர் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் தாம் கேட்டுக்கொண்டதற்கு இணங்க செயற்பட்டிருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்காது எனவும் சபாநாயகர் மேலும் தெரிவித்தார்.

எனினும் இறுதி வாக்களிப்பு கணக்கெடுப்பில் எவ்வித மாற்றங்களையும் மேற்கொள்ள முடியாது எனவும் நாடாளுமன்ற உத்தியோகத்தர் ஒருவர் கெப்பிட்டல் செய்தி பிரிவிற்கு தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!