இலங்கையில் கறுப்பு பூஞ்சை இல்லை!

கருப்பு பூஞ்ஞை நோய் கண்டறியப்பட்டுள்ளதாக வெளியான தகவலை அரசாங்கம் மறுத்துள்ளது. அம்பாறையில் ஒருவர் கறுப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறுவது தவறானது என்று ஆரம்ப சுகாதார, தொற்றுநோய் மற்றும் கொவிட் நோய் கட்டுப்பாட்டு இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே ஆங்கில ஊடகமொன்றுக்கு தெரிவித்தார்.

இலங்கையில் ‘கறுப்பு பூஞ்சை’நோய் தாக்கியதாக கூறப்படும் நபர் காசநோய் நோயாளி, அவர் காசநோய்க்கான மருந்துகளை எடுத்துக் கொள்ளவில்லை என்றார். அந்த நபருக்கு பூஞ்சை தொற்று இருப்பது கண்டறியப்பட்டது, ஆனால் அது கறுப்பு பூஞ்சை அல்ல என்று அமைச்சர் தெரிவித்தார்.

அம்பாறையில் ஒருவருக்கு கருப்பு பூஞ்ஞை நோய் உள்ளமை கண்டறியப்பட்டதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!