“பள்ளியில் என்னைப்போல் பல ஆசியர்கள் உள்ளனர்” – மாணவிகளுக்கு பாலியல் தொல்லையளித்த ஆசிரியர் பரபரப்பு வாக்குமூலம்!

பத்மா சேஷாத்ரி பள்ளியில் தன்னைப் போல் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கும் ஆசிரியர்கள் பலர் உள்ளதாக ராஜகோபால் போலீஸாரிடம் வாக்குமூலம் அளித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பத்மா சேஷாத்ரி பள்ளியில் ராஜகோபால் என்ற ஆசிரியர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் கே.கே.நகர் போலீஸார் ராஜகோபாலின் வீட்டிற்கு சென்று அவரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாணை நடத்தினர்.

அப்போது அவர் அளித்த வாக்குமூலம் காவல்துறையினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பத்மா சேஷாத்ரி பள்ளியில் தன்னைப்போல் மேலும் சிலர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தொடர்ந்து அளித்து வருவதாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளார் .

ராஜகோபாலனின் வீட்டில் இருந்து அவரது செல்போன் , லேப்டாப் ஆகியவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர் . அதனை ஆய்வு செய்த போது வாட்ஸ் அப் மெசேஜ்களை அவர் தனது செல்போனில் இருந்து நீக்கியது கண்டுபிடிக்கப்பட்டது .

அவற்றை மீட்க சைபர் க்ரைம் போலீஸார் முயற்சித்து வருகின்றனர். வேறு சில ஆசிரியர்களும் பாலியல் தொல்லை கொடுத்து வருகின்றனர் என்று ராஜகோபால் கூறியிருப்பதால் போலீஸார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!